அந்தக்காலத்தில் பரவர் சமுதாயத்தில் கல்யாண வீடுகளில் பாடப்படும் பாடல் இது:
நல்ல விருந்திது நல்ல விருந்திது
நாம் புசித்துக் களிப்போம்
வீவெல்லால் வீவெல்லால் வீவெல்லால் ஓ
வீவெல்லால் வீவெல்லால் வீவெல்லால் ஓ
வீவெல்லால் வீவெல்லால் வீவெல்லால் ஓ
வீவெல்லால் கம்பெனி.
1. உயர் பாசுமதி அரிசியும்,
ஆட்டுக்கடாவின் நல் இறைச்சியும்
அண்டிப் பருப்பு, கிஸ்மிஸ் நெய் சேர்ந்த,
பிரியாணி உண்டிடுவோம்.
2. சில்லி சிக்கனுடன், கோழி ரோஸ்ட்டும்
அவித்த முட்டையுடன் ஆம்லெட்டும்
பீட்ருட் சம்பலுடன் ஜாமும் சேர்த்து
ருசித்து சாப்பிடுவோம்.
வீவெல்லால் வீவெல்லால் வீவெல்லால் ஓ
வீவெல்லால் கம்பெனி (இதன் அர்த்தத்தை அடுத்த மடலில் எழுதுகிறேன்).