srirama's time men & places during mahabharata time?

Started by Private on Monday, November 16, 2020
Problem with this page?

Participants:

  • Private
    Geni member

Related Projects:

Private
11/16/2020 at 8:21 AM

ராமர் கால மனிதர்கள் கிருஷ்ணன் காலத்தில்.....1. ஜே கே சிவன்

ராமாயணம் நடந்த காலம் கி.மு. 5000 த்துக்கு முன்னால் . பாரதம் அதற்கு ரெண்டாயிரம் வருஷத்துக்கு பிறகு . நாமெல்லாம் அதற்கும் அப்புறத்துக்கு அப்பறம். ஏழாயிரம் வருஷம் பின்னாலே இருப்பவர்கள்.

ராமாயண காலத்தவர்கள், ராமரின் வம்சாவளியில் யாராவது பாரதத்தின் போது இருந்திருப்பார்களா? என்று ஒரு ஆராய்ச்சி. எந்த ஆராய்ச்சியும் இல்லாமல் நமக்கே தெரிந்தவர்கள் ஹனுமான், ஜாம்பவான், ஜரனாக வந்த வாலி..... இப்படி சிலர். ஆனால் மற்றவர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்று யோசிக்க என்றே சில பேர் தமது வாழ்நாளை ஒதுக்கி தேடித் தேடியே காணாமல் போயிருக்கிறார்கள். யாருக்கோ சிலருக்கு நிறைய நேரம் இருந்து ஒருவேளை பகலும் இரவும் பல புத்தகங்கள் படித்து, நிறைய இடம் சுற்றி அலைந்து தேடி பார்த்து, யாரையெல்லாமோ கேட்டு ஏதாவது ஒரு மலையைக் கெல்லி எலியை பிடித்து இருக்கிறார்கள். முயற்சி பலனளித்திருக்கிறது. நாம் சுலபமாக அவர்கள் கண்டுபிடித்து சொன்னதை வேர்க்கடலை சாப்பிட்டுக்கொண்டே படுக்கையில் படுத்துக்கொண்டு அறிய முடிகிறது.

அப்படி ராமாயண காலத்தவர்கள் பாரத காலத்திலும் இருந்திருந்தால் அவர்கள் யார், பாண்டவர்களோடா, கௌரவர்களோடா யாருடன் சேர்ந்து குருக்ஷேத்திர பாரத யுத்தத்தில் கலந்து கொண்டார்கள்?
இது ஒரு சுவாரஸ்யமான கண்டுபிடிப்பு. சில விபரங்கள் அறிந்ததை சொல்கிறேன்:

ராமனின் சகோதரர்களைத் தெரியுமே. பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன். இதில் தக்ஷசீலம் என்ற நகரத்தை படைத்தவன் பரதன். இப்போது பாகிஸ்தானில் உள்ளது. உலகப் புகழ் பெற்ற சர்வ கலாசாலை அங்கே இருந்தது. லக்ஷ்மணபுரி, எனும் லக்னோ இப்போது உ.பி. தலைநகராக நிறைய பேர் அப்பா மகன் கட்சியில் சேர்ந்து சண்டை போடும் இடமாக இருக்கிறது. சத்ருக்னன் மதுவன காட்டை அழித்து மதுராவாக்கினான். கிருஷ்ணன் ஊர்.சொல்லவே வேண்டாம்.

ராமனின் ரெட்டைபிள்ளைகளில் லவன் ஸ்தாபித்த ஊர் லவபுரி. இப்போது லாகூர். பாகிஸ்தானில் உள்ளது. தென் கிழக்கு ஆசியாவில் லாவோஸ் என்னும் நகரம் கூட அவன் பெயர் சம்பந்தப் பட்டதாம். லாவோஸில் நிறைய பேர் ராமாயணம் தெரிந்தவர்கள். சிதைந்து போன ராமாயணம் அது. நமக்கு எளிதில் புரியாது. அதற்குப் பெயர் ''ப்ரா லக் ப்ரா ராம்'' லேசாக லக்ஷ்மணன் ராமன் என்று காதில் விழுகிறதா? . தாய்லாந்தில் தலைநகர் பாங்காக்கிலிருந்து 150 கி.மீ. தூரத்தில் ஒரு ஊர் பெயர் ''லோப் புரி'' (லவ பூரி என்பது வாயில் கொழுக்கட்டை வைத்துக்கொண்டு பேசுவது போல் திரிந்து இருக்கிறதோ). லவனின் பேரில் அமைந்தது. காலவர்ணாதீஷ் என்கிற தக்ஷசீல ராஜா இதை நிர்மாணித்தான் என்கிறார்கள். 7வது நூற்றாண்டில். அவன் வைத்த பெயர் லவபுரி என்னும் லாகூர். சிதைந்து போய் லோப் புரி.

ராம ராஜ்யத்தில் கோசல நாட்டின் தலைநகர் அயோத்தி. ராமன் பிள்ளைகள் வட கோசலம் கிழக்கு கோசலம் என அதை ரெண்டாக பிரித்து ஆண்டார்கள். லவனுக்கு வட கோசலம். குசனுக்கு கிழக்கு கோசலம். லவனின் தலைநகர் ஸ்ராவஸ்தி. புத்தர் காலத்தில் ஆறு பெரிய நகரங்களில் அது ஒன்று. குஷாவதி குசனின் தலைநகர். இப்போது அது குஷிநகர், கோரக்பூர் அருகே உ.பி. யில் உள்ளது.

ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்த பிக்ஷு புத்த கோஷ் என்ன சொல்கிறார்? புத்தர் காலத்திலேயே 180 மில்லியன் ஜனங்கள். மஹா பாரத சமயத்தில் கோசலம் பல பிரிவுகளாக இருந்ததாம் வட கோசலம், தென் கோசலம், கிழக்கு, மத்திய கோசலங்கள் என்று பல இடங்களாகிவிட்டது.

கிழக்கு கோசலத்தை மகத ராஜ ஜராசந்தன் பிடித்துக்கொண்டான். மத்திய கோசலம் தான் ஒரிஜினல் ராமர் கால கோசலம். அம்மா ஊர். அயோத்தி இன்னும் அதன் தலைநகர்.தீர்க்க யக்னியா என்கிற அரசன் ஆண்டான் அதை. மத்திய வட கோசலங்களை பீமன் ஜெயித்து பாண்டவ ராஜ்யமாக்கினான். தென் கோசலம் தான் ராமனின் தாய் கோசலையின் ஊர். அதை சகாதேவன் கைப்பற்றி ஆண்டான்.

ஒரு ராஜ்ஜியம் மத்திய கோசலத்துக்கும் தென் கோசலத்துக்கு இடையே இருந்ததை பிருஹத் பலன் என்ற குச வம்ச ராஜாவின் ஆட்சியில் இருந்தது. இந்த பிருஹத் பலன் தான் ஜயத்ரதன் என்று தோன்றுகிறது.

பாண்டவர்களின் பாட்டிகளான அம்பிகை அம்பாலிகை, (பீஷ்மர் ஜெயித்து கடத்தி வந்த ராஜகுமாரிகள். அம்பை தான் தனித்துப் போய் பின்னால் சிகண்டியாகி பீஷ்மரை பழிதீர்க்கிறான்(ள்)) திருதராஷ்டிரன் பாண்டுவின் அம்மாக்கள் இந்த இருவரும் காசி ராஜன் மகள்கள். கோசல இளவரசிகள்.

பிருஹத்பலன் ராமனின் ரெட்டை பிள்ளைகளில் ஒருவனான குச வம்சத்தில் 28வது தலைமுறை. கௌரவர்களோடு சேர்ந்து பாண்டவர்களை குருக்ஷேத்திர யுத்தத்தில் எதிர்த்தவன். பீஷ்மர் அவனை ஒரு அதிரதனாக நியமித்தார்.

மஹாபாரத யுத்தத்தில் 13வது நாள் துரோணர் தலைமையில் சக்ரவியூகமாக சேனை அமைந்தது. யுதிஷ்டிரனை உயிரோடு பிடிக்க திட்டம். திரிகர்த்தர்கள் அர்ஜுனனை தொலைதூரம் இழுத்து சென்றார்கள்.

இங்கு தான் கதை மாறுகிறது. அபிமன்யு சக்ரவியூகத்தை பற்றி முழுதும் அறியாதவன், எப்படியோ உடைத்து உள்ளே சென்றுவிட்டான். வெளியே வர இயலவில்லை. அப்போது அதிரதர்கள் மஹாரதர்கள் ஒன்று கூடி கர்ணன், அஸ்வத்தாமன், க்ரிதவர்மன் க்ருபாச்சாரியார், துரோணர் எல்லோருமாக அவனை எதிர்த்தார்கள். பிருஹத்பலனை அபிமன்யு எதிர்த்து அவன் தலையை துண்டித்தான் என்று கதை சொல்கிறார்கள். நமது பாரததத்தில் பிருஹத்பலன் ஜயத்ரதன் என்றால் அபிமன்யு கொல்லப்பட்டவுடன் அர்ஜுனன் தான் அவன் தலையை துண்டித்தான் என்று அறிகிறோம்.

Create a free account or login to participate in this discussion