TAMIL KINGS’ PART IN MAHABHARATA WAR
மஹாபாரதப் போரில் #தமிழ் மன்னர்கள்
பகுதி:-1
மஹாபாரதப் போரில் தமிழ் மன்னர்கள் ஆகிய சேர, பாண்டிய மன்னர்களின் பெரும் பங்களிப்பை ஏன் டிவி தொடர்களிலும் மஹாபாரத சொற்பொழிவாளர்களும் புறக்கணிப்பு செய்கிறார்கள் என்பது எனக்கு புரியவே இல்லை....
வியாசர் பல இடங்களில் இதுபற்றி கூறி இருந்தாலும் இன்றுவரை அந்த செய்திகள் புறக்கணிப்பு செய்யப்படுவது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை கொடுக்கிறது..
அதை தமிழர்கள் குறிப்பாக என் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அது பற்றி 5 பதிவுகளை தொடர்ந்து வெளியிட இருக்கிறேன்..
முதல் இரண்டு பதிவில் முதலில் #சேர மன்னனின் பங்களிப்பையும் பிறகு #பாண்டியனின் பராகிரமத்தை பார்ப்போம்.
அதை தொடர்ந்து 3ல் இருந்து 5 பதிவுகள் #மூலமஹாபாரதத்தில் வியாசர் எந்த பருவத்தில் தமிழ் மன்னர்களின் பங்களிப்பை எவ்வாறு கூறுகிறார் என்பதை #வியாசர்_வாய்மொழியில் (தமிழாக்கத்தில்) அப்படியே கூற இருக்கிறேன்.
_________________________
பாண்டவர்களுக்கும் , கெளரவர்களுக்கும் போர் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்தினார் பலராமர். இருவரும் தமக்கு உறவினர்கள் என்பதால் பாரதப் போரில் பங்கு எடுப்பதில்லை என்ற முடிவுடன் தீர்த்தயாத்திரை மேற்கொண்டார்.
சேரமன்னனான #உதயஞ்சேரலும் இதே கருத்தைதான் கொண்டு இருந்தான். அவன் இருவரில் யவரையும் ஆதரிக்கவில்லை! ஆனால் "பாரதப் போரில் பங்குபெறும் இரண்டு படை வீரர்களுக்கும் ஒரு நாள் உணவளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறி நடுநிலை வகித்தான்.
பாரதத்தின் தென்கோடியில் இருக்கும் தமிழகத்தில் குறிப்பாக #கேவைமாவட்டத்தையும் கேரளத்தையும் உள்ளடக்கிய சேரநாட்டில் இருந்து இன்றைய டெல்லிவரை சென்று ஏறத்தாழ 2600000 (இருபத்தி ஆறு #லட்சம்) பேருக்கு மூன்று வேளையும் உணவளித்தான் நம் முப்பாட்டன் என்றால் அதற்கு அவனுக்கு எவ்வளவு தானியங்கள் உணவுப் பொருட்கள் தேவைப்பட்டிருக்கும்? இதை எடுத்துச்செல்ல எத்தனை யானை, குதிரை வண்டிகள் தேவைபட்டிருக்கும்? உணவை சமைத்து பரிமாற எவ்வளவு பணியாட்கள் தேவைபட்டிருப்பார்கள்?
இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான காரியத்தை நடத்திக் காட்டியதாலேயே வரலாற்றில் " #பெருஞ்சோற்றுதியன் சேரலாதன் " எனும் பட்டம் பெற்றவன் இந்த சேர மன்னன்.
“ஈரைம்பதின்மரும் பொருது களத்தொழிய பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்”