சகுனி குறித்து இதுவரை வெளிவராத சுவாரஸ்யத் தகவல்கள்! - ஆன்மீகமும்.... ஜோதிடமும்....
மகாபாரதக் கதை பற்றிய அறிமுகம் இருப்பவர்களுக்கு சகுனியைப் பற்றிதெரியாமல் இருக்காது. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையில் நின்று விளையாடியவர் இந்த சகுனி தான். இன்னும் சொல்லப்போனால் மகாபாரதக்கதையே சகுனியால் வழிநடத்திச் செல்லப்பட்டது என்று சொல்லலாம். குருசேத்ரா போரின் மாஸ்டர் மைண்டான சகுனி காந்தார அரச குடும்பத்தின் இளவரசன். மகாபாரதத்தின் முக்கிய வில்லான பார்க்கப்படும் சகுனியின் சகோதரி தான் காந்தாரி அதாவது கௌரவர்களின் தாய். சகுனியைப் பற்றி இதுவரை நீங்கள் அறிந்திராத சில சுவாரஸ்யத் தகவல்கள்
#1 சகுனிக்கு கோபம் பாண்டவர்களை பழிவாங்க வேண்டும் என்பதல்ல பீஷ்மரை பழிவாங்க வேண்டும் என்பதே. அந்த பழி வாங்கும் எண்ணத்தை விதைத்து சுபலா மஹாராஜா. சகுனியின் தந்தை. திருதுராஸ்டிரருக்கு காந்தாரியை மணமுடித்து கொடுக்கும் போது தன்னுடைய மகளுக்கு செவ்வாய் தோஷம் இருப்பதை மறைத்து விடுகிறார் சுபலா மகாராஜா இந்த விவராம் பீஷ்மரால் கண்டுபிடிக்கப்படுகிறது அதனால் அவமானத்தை சந்திக்கும் சுபலா மஹாராஜா அவரை பழிவாங்க துடிக்கிறார்.
#2 செவ்வாய் தோஷம் இருப்பதால் திருமணத்தில் பிரச்சனை நிகழு, இணைக்கு மரணம் கூட நிகழலாம் என்று சொல்லப்படுகிறது. இதனால் செவ்வாய் தோஷத்தை கழிக்கும் விதமாக காந்தாரிக்கு ஒரு ஆட்டுடன் திருமணம் நடத்தி, அது பலியிடப்படுகிறது. சகுனியின் சகோதரியான காந்தாரிக்கு செவ்வாய் தோஷம் இருப்பதினாலேயே பார்வையற்ற இளவரசரை தனது சகோதரிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், அதனால் சகுனி கோபம் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இரண்டாவதாக திருதுராஸ்டிரரை மணந்து கொள்கிறார். அப்படியானால் நான் ஒரு விதவையா திருமணம் செய்திருக்கிறேன். இந்த உண்மையை ஏன் மறைத்தீர்கள் என்று சொல்லி காந்தாரியின் குடும்பத்தினர் அத்தனை பேரையும் சிறையில் அடைத்தான் திருதுராஸ்டிரர்.
#3 சிறையில் அடைக்கப்பட்ட அத்தனை பேரும் பசியால் சாக வேண்டும் என்று சொல்லி, எல்லாருக்கும் ஒரு நாளைக்கு ஒரு கைப்பிடி அரிசி மட்டுமே உணவாக வழங்கப்பட்டது. இதை மட்டுமே சாப்பிட்டு நம் அத்தனை பேரால் உயிர் வாழ முடியாது என்பதை உணர்ந்த மஹாராஜா தன்னுடைய இளைய மகனான சகுனியை அழைத்தார். எங்கள் அத்தனைப் பேரின் உணவையும் உனக்கே தருகிறோம். இங்கிருந்து நீ ஒருவனாவது தப்பிக்க வேண்டும். நம்மை அவமானப்படுத்தியவர்களை பழி வாங்க வேண்டும் என்கிறார்.
#4 மகனும் சம்மதிக்கிறார். ஒரு காலத்திலும் மகன் இதனை மறக்கக்கூடாது என்று சொல்லி, மகனின் காலை திருகி வச்சத்தை ஏற்படுத்துகிறார். மரணப்படுக்கையில் மஹாராஜா இருக்கும் போது மகள் காந்தாரி மற்றும் திருதுராஷ்டிரர் வந்து பார்க்கிறார்கள். எனக்காக என்னுடைய இளைய மகனான சகுனியை மட்டும் விடுதலை செய்து அவனை பார்த்துக் கொள்ள வேண்டும். அவன் உங்களது 100 குழந்தைகளுக்கும் பாதுகாவலனாக விளங்குவான் என்று சொல்லி இதை நிறைவேற்றும்படி சத்தியம் கேட்கிறார். மரணப்படுக்கையில் சொல்லப்பட்ட வார்த்தைகளை மீற முடியாமல் திருதுராஷ்டிரர் சம்மதிக்கிறார்.
#5 தந்தை இறந்த பிறகு அவரது எலும்பினைக் கொண்டு பகடையை தயாரித்து வைத்துக் கொள்கிறார் சகுனி. இது தந்தையின் ஆசைப்படியும், என் சொல்படியும் நடக்கும் வகையில் அந்த பகடை இருக்கிறது.அதனால் தான் இந்த பகடை மர்மம் நிறைந்தது என்று சொல்லப்படுகிறது.
#6 கௌரவர்களின் பாதுகாவலான விளங்குகிறார். கௌரவர்களின் மூத்தவரான துரியோதனனுக்கு மிகவும் நெருக்கமானவராக மாறி தன்னுடைய காயை மெல்ல நகர்த்துகிறார். பாண்டவர்களின் பக்கம் நிற்கும் பீஸ்மரை பழி வாங்க வேண்டும் என்றால் பாண்டவரை வம்பிழுக்க வேண்டும் என்று திட்டம் தீட்டி போருக்கு அழைப்பது, பகடை விளையாட அழைப்பது என்று தன் திட்டங்கள் ஒவ்வொன்றாய் நிறைவேற்றிக் கொண்டார்.
#7 தொடர்ந்து கௌரவர்களிடம் பாண்டவர்கள் மீதான வன்மைத்தை வளர்த்தார். அவர்களுக்கு தீங்கு செய்யும் வகையில் பல்வேறு விஷயங்களை தூண்டிவிட்டார். மஹாபாரதம் நடத்தப்பட்டதற்கான ஓர் திறவுகோளாக இவர் இருந்தார் என்றே சொல்லலாம்.
#8 சகுனிக்கு உளுக்கா மற்றும் விருக்சுறா ஆகிய இரண்டு மகன்கள் இருந்திருக்கிறார்கள். தங்களுடன் வந்து அமைதியான வாழ்க்கையை வாழுமாறு மகன்கள் எவ்வளவோ அழைத்தும் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றாமல் தான் வர மாட்டேன் என்று சொல்லி மகன்களுடன் செல்ல மறுத்து விடுகிறார்.
#9 மகாபாரதப்போரின் இறுதிநாளான பதினெட்டாம் நாள் பாண்டவர்களின் இளையவரான சகாதேவனால் படுகொலை செய்யப்பட்டு உயிரைத் துறக்கிறார் சகுனி. பீஷ்மர் முள்படுக்கையில் படுத்து உயிர் துறந்த பிறகு தன் தந்தையின் ஆசை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியில் உயிரைத் துறந்தார் சகுனி.
#10 கேரளாவின் கொல்லம் மாநிலத்தில் உள்ள பவித்ரீஸ்வரம் என்ற இடத்தில் சகுனிக்காக கோவில் ஒன்று இருக்கிறது. சகுனியிடம் இருந்த நற்குணங்களை போற்றும் வகையில் இந்த கோவில் எழுப்பப்பட்டிருக்கிறதாம்.
#11 குறவர் இனமக்களின் இஷ்ட தெய்வமாக சகுனி இருக்கிறது. இந்த இடத்தில் தான் சகுனிக்கு மோட்சம் கிடைத்தாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் நாடு முழுவதும் பயணித்ததாகவும், அப்படி பயணிக்கும் போது இந்த இடத்தில் தங்களுடைய ஆயுதுங்களை பகிர்ந்து கொண்டதால், இந்த இடத்திற்கு பகுதீஸ்வரம் என்ற பெயர் வந்திருக்கிறது காலப்போக்கில் இது பவித்தீஸ்வரம் என்று பெயர் பெற்றிருக்கிறது.
#12 இந்த கோவிலில் எந்த விதமான பூஜைகளோ சடங்கு சம்பிரதாயங்களோ நடப்பதில்லை சகுனிக்கு இளநீர், வேட்டி,பட்டு போன்றவை காணிக்கையாக வைக்கப்படுகிறது. இன்றைக்கும் அந்த கோவிலை குறவர் இன மக்கள் தான் பராமரித்து வருகிறார்கள்